பொங்கோல் ஈஸ்ட் HDB பிளாட் ஒன்றில் தீ விபத்து – விசாரணை தொடர்கிறது..!

100 people evacuated after fire breaks out in Punggol East HDB flat
100 people evacuated after fire breaks out in Punggol East HDB flat (Photo: Facebook/Singapore Civil Defence Force)

பொங்கோல் ஈஸ்ட்டில் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் (HDB) பிளாட் ஒன்றில், நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து நூறு பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

நேற்று மதியம் 12.25 மணியளவில், பிளாக் 167C பொங்கோல் ஈஸ்ட்டில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து புகார் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF) பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து 4ஆம் கட்டமாக தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணை..!

SCDF வந்தவுடன், பிளாக்-ன் எட்டாவது மாடியில் தீ பற்றி எரிவதை கண்டதாக SCDF தெரிவித்துள்ளது.

சுவாசக் கருவி அணிந்த SCDF தீயணைப்பு வீரர்கள் வீட்டிற்குள் நெருப்பை பொருட்படுத்தாது நுழைந்தனர்.

அதனை தொடர்ந்து, சுமார் 100 பேரை காவல்துறையினர் அங்கிருந்து வெளியேற்றினர். மேலும் இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று SCDF குறிப்பிட்டுள்ளது.

இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது விசாரணையில் உள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 69 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் COVID-19 தொற்று முற்றிலும் இல்லை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg