சிங்கப்பூரில் மேலும் 69 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் COVID-19 தொற்று முற்றிலும் இல்லை..!

(Photo: Roslan Rahman/AFP via Getty Images)

சிங்கப்பூரில் மேலும் 69 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் COVID-19 தொற்று முற்றிலும் இல்லாத இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 59 தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் 7 தற்காலிக கட்டுமான விடுதிகள் ஆகியவை அடங்கும் என்று மனிதவள அமைச்சு (MOM) செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கூகிள் நிறுவனத்தின் புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் பயிற்சி திட்டம்..!

மேலும், குணமடைந்த ஊழியர்களுக்கான 11 தங்குமிடங்களில், 41 ப்ளாக்குகள் இதில் கிருமித்தொற்று முற்றிலும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற தங்கும் விடுதிகள்:
  • தெம்பனீஸ் தங்கும் விடுதி
  • Cochrane லாட்ஜ் 1
  • Cochrane லாட்ஜ் 2
  • சாங்கி லாட்ஜ் 2
  • சுங்கே தெங்கா லாட்ஜ்

குறிப்பாக இதில் சுங்கே தெங்கா லாட்ஜ் சுமார் 16,000 ஊழியர்களை கொண்ட மிகப்பெரிய தங்கும் விடுதி ஆகும் என்றும் MOM குறிப்பிட்டுள்ளது.

ஜூலை 17 நிலவரப்படி, சுங்கே தெங்கா லாட்ஜில் 2,203 COVID-19 சம்பவங்கள் பதிவாகி இருந்தன, இது சிங்கப்பூரில் இரண்டாவது பெரிய COVID-19 நோய்ப்பரவல் இடமாக இருந்தது. பின்னர் ஒரு நாள் கழித்து, சுகாதார அமைச்சகம் (MOH) நோய்ப்பரவல் இல்லாத இடமாக அதனை அறிவித்தது.

மொத்தத்தில், 17 குணமடைந்த ஊழியர்களுக்கான விடுதிகளில் 56 ப்ளாக்குகள் மற்றும் 891 தங்கும் விடுதிகளும் COVID-19 அபாயம் நீங்கிய பகுதிகளாக உறுதிசெய்யப்பட்டுள்ளன.

நேற்று திங்கள்கிழமை நிலவரப்படி, சுமார் 247,000 வெளிநாட்டு ஊழியர்கள் கிருமித்தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளனர் அல்லது அவர்களுக்குக் கிருமித்தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையானது ஒரு வாரத்திற்கு முன்பு சுமார் 215,000 ஆக இருந்தது குறிப்பித்தக்கது.

இதையும் படிங்க : “சிங்கப்பூரில் இன நல்லிணக்கத்தை வலுப்படுத்த தொடர் முயற்சிகள் தேவை” – இன நல்லிணக்க நாள் வாழ்த்து கூறிய பிரதமர் திரு. லீ..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg