“சிங்கப்பூரில் இன நல்லிணக்கத்தை வலுப்படுத்த தொடர் முயற்சிகள் தேவை” – இன நல்லிணக்க நாள் வாழ்த்து கூறிய பிரதமர் திரு. லீ..!

(Photo courtesy: pmo.gov.sg)

ஒவ்வொரு ஆண்டும் இன நல்லிணக்க தினத்தை கொண்டாடுகிறோம், ஆனால் இன நல்லிணக்கத்தை தொடர்ச்சியான வலுப்படுத்த தொடர் முயற்சியும் ஈடுபாடும் தேவை என்று பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.

“ஒவ்வொரு புதிய தலைமுறையினருக்கும் வெவ்வேறு வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் குறிப்புகள் இருக்கும், அவை இனம் மற்றும் மதம் குறித்த அவர்களின் கருத்துக்களை வடிவமைக்கின்றன.”

இதையும் படிங்க : கடற்கரை செல்வோர் மற்றும் நீச்சல் மேற்கொள்வோர்க்கு ஆபத்தான ஜெல்லிமீன்கள் குறித்த எச்சரிக்கை..!

“எனது தலைமுறை 1960-களில் நடந்த இனக் கலவரங்களை கண்டுள்ளது, அதே நேரத்தில் இன்றைய தலைமுறை “Black Lives Matter” இயக்கம் போன்ற உலகளாவிய பிரச்சினைகளை கண்டு வளர்க்கின்றனர்” என்றார்.

“அன்றைய தலைமுறையினர் இனம் மற்றும் மதத்தைப் பற்றி பேசும்போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பர், கடந்த கால மோதல்களையும், இன்று நாம் அனுபவிக்கும் நல்லிணக்கத்தை அடைய கடின உழைப்பையும் கண்டிருக்கிறோம். இளைஞர்கள் இந்த விஷயங்களைப் பற்றி மிகவும் திறந்தவர்களாகவும், முக்கியமான தலைப்புகளைப் பற்றி பேச அதிக விருப்பமாகவும் உள்ளனர்.”

We celebrate Racial Harmony Day every year, but it is strengthening racial harmony that demands constant effort and…

Posted by Lee Hsien Loong on Monday, July 20, 2020

மேலும், “அனைவருக்கும் இணக்கமான சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இன நல்லிணக்க தின வாழ்த்துக்கள்” என்று திரு. லீ கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர் தொடர்பாக ஏற்பட்ட நிர்வாகத் தவறுக்கு மன்னிப்பு கோரிய மனிதவள அமைச்சு, சுகாதார அமைச்சு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg