கடற்கரை செல்வோர் மற்றும் நீச்சல் மேற்கொள்வோர்க்கு ஆபத்தான ஜெல்லிமீன்கள் குறித்த எச்சரிக்கை..!

Beach-goers and swimmers at various locations advised to be alert after sightings of dangerous box jellyfish
Beach-goers and swimmers at various locations advised to be alert after sightings of dangerous box jellyfish (Photo: Facebook/Marine Stewards and Haytham El-Ansary)

சிங்கப்பூரின் செந்தோசா தீவுக் கடல்பகுதியில், மிகுந்த வலியை ஏற்படுத்தும் மற்றும் அபாயகரமான கொடுக்கு போன்ற உறுப்பை கொண்ட பாக்ஸ் ஜெல்லிமீன்கள் (Box jellyfish) காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடற்கரைகளில் நீச்சல் தொடர்பான ஆலோசனைகளை சென்டோசா மேம்பாட்டுக் கழகம் வழங்கியுள்ளது, மேலும் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இதையும் படிங்க : உடற்பயிற்சிக்கூடம் மற்றும் திரையரங்கு உள்ளிட்ட இடங்களுக்கு COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்தனர்..!

Marine Stewards என்னும் பாதுகாப்பு குழு, சனிக்கிழமை (ஜூலை 18) ஒரு பேஸ்புக் பதிவில் சிங்கப்பூரைச் சுற்றியுள்ள கடற்கரைகளில் பாக்ஸ் ஜெல்லிமீன்கள் காணப்பட்ட பல சம்பவங்களை எடுத்துக்காட்டியுள்ளன.

பாக்ஸ் ஜெல்லிமீன்கள், கடல் குளவிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அவை கொடுமையான வலியை ஏற்படுத்தும் என்றும், கூடுதலாக மரணத்தை ஏற்படுத்தக்கூடிய விஷக் கொடுக்குகளை கொடுள்ளதாகவும் ஆஸ்திரேலிய கடல் அறிவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை நடந்த மிக சமீபத்திய சம்பவத்தில், Palawan கடற்கரையில் FOC சென்டோசா அருகே ஆழமற்ற நீரில் படகோட்டிக்கொண்டிருந்த ஒரு சிறுமி ஜெல்லிமீனால் தாக்கப்பட்டார்.

ஜெல்லிமீன்களின் இனங்கள் அடையாளம் காணப்படவில்லை. இதனை அடுத்து, Marine Stewards பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில் ஜெல்லிமீன் மற்றும் சிறுமியின் காலில் மெல்லிய, சிவப்பு கோடுகள் குறித்து காட்டப்பட்டன.

கடந்த ஜூலை 3, 14 மற்றும் 16ஆம் தேதிகளில், துவாஸ், புலாவ் செரிங்காட் (Pulau Seringat), லசாரஸ் தீவு , மரீன் செந்தோசா கோவ் ஆகிய இடங்களில் ஜெல்லிமீன்கள், அரை மீட்டரிலிருந்து ஒரு மீட்டர் நீளம் மற்றும் கொடுக்குகளுடன் காணப்பட்டன.

தயவுசெய்து பாதிக்கப்பட்ட பகுதியை தேய்க்க வேண்டாம் அல்லது Tentacles எனப்படும் உணர் இழைகளை அகற்ற விரல்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், “தயவுசெய்து முதலுதவி உதவிக்காக BPOsகளைத் தொடர்பு கொள்ளுங்கள்” என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஜெல்லிமீன்களைக் கையாளக்கூடாது என்றும், மேலும் அவற்றை கண்டால் 1800-471-7300 என்ற NParks ஹெல்ப்லைனை அழைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர் தொடர்பாக ஏற்பட்ட நிர்வாகத் தவறுக்கு மன்னிப்பு கோரிய மனிதவள அமைச்சு, சுகாதார அமைச்சு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg