உடற்பயிற்சிக்கூடம் மற்றும் திரையரங்கு உள்ளிட்ட இடங்களுக்கு COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்தனர்..!

Fernvale Square ActiveSG Gym, FilmGarde Bugis+ among places visited by COVID-19 cases while infectious
Fernvale Square ActiveSG Gym, FilmGarde Bugis+ among places visited by COVID-19 cases while infectious (Photo: Facebook/Activesg GYM at Fernvale Square/Google Maps)

COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியலில் புதிதாக சில இடங்களைச் சுகாதார அமைச்சகம் (MOH) சேர்த்துள்ளது.

புதிய இடங்களின் பட்டியலில், உடற்பயிற்சிக்கூடம் மற்றும் திரையரங்கு போன்ற இடங்களும், மேலும் VivoCity, IMM, Sun Plaza ஆகிய கடைத்தொகுதிகளும்
அடங்கும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் சுமார் 2,500 கட்டுமானத் திட்டங்கள் பணிகளை மீண்டும் தொடங்க அனுமதி..!

புதிய இடங்களின் பட்டியல்:
  • Chong Pang City ஈர சந்தை & உணவங்காடி நிலையம்
  • கம்போங் அட்மிரல்ட்டி உணவங்காடி நிலையம்
  • Ocean Curry Fish Head உணவகம்
  • முஸ்தபா சென்டர்
  • HAO மார்ட்
  • Thasevi Food உணவகம்
  • Fernvale Square ActiveSG உடற்பயிற்சிக்கூடம்
  • yakitori restaurant LECOQ
  • SaladStop! outlet @ The Metropolis and food stall 313 KPT
(Source : MOH)

குறிப்பிட்ட அந்த இடங்களில் இருந்தவர்கள், அங்கு சென்றுவந்த நாளிலிருந்து 14 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் MOH கூறியுள்ளது.

துப்புரவு மற்றும் கிருமி நீக்கம் குறித்த வழிகாட்டுதல்களை வழங்க தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர் தொடர்பாக ஏற்பட்ட நிர்வாகத் தவறுக்கு மன்னிப்பு கோரிய மனிதவள அமைச்சு, சுகாதார அமைச்சு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg