வெளிநாட்டு ஊழியர் தொடர்பாக ஏற்பட்ட நிர்வாகத் தவறுக்கு மன்னிப்பு கோரிய மனிதவள அமைச்சு, சுகாதார அமைச்சு..!

Manpower, health ministries apologise for 3-week delay in worker's COVID-19 test result (Photo: Istock)

தங்களுடைய நிர்வாகப் பிழைக்காக மனிதவள அமைச்சகம் (MOM) மற்றும் சுகாதார அமைச்சகம் (MOH) மன்னிப்பு கோரியுள்ளன.

அதாவது வெளிநாட்டு ஊழியர் ஒருவருக்கு COVID-19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு, பின்னர் அந்த சோதனை முடிவை மூன்று வாரங்களுக்குப் பிறகு அவருக்குத் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வேலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் 140,000 முதலாளிகளுக்கு S$4 பில்லியன்..!

சோதனை முடிவுகளை ஊழியர் மற்றும் அவரது முதலாளியிடம் தெரிவிப்பதில் ஏற்பட்ட பிழை மற்றும் அதன் தாமதத்திற்கு மன்னிப்பு கோருவதாகவும், மேலும் சூழல் குறித்து விளக்கம் அளிக்க முதலாளியை அணுகியுள்ளதாகவும் அமைச்சுகள் ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளன.

தோ குவான் தங்கும் விடுதியில் வசிக்கும் அவருக்கு ஜூன் 22 அன்று பரிசோதனையை மேற்கொள்ளப்பட்டது, ஆனால் அவருக்கு ஜூலை 13 அன்று தான் நோய்த்தொற்று இருப்பதாக அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

கடந்த வாரம் இந்த விவகாரம் குறித்து இரண்டு தனித்தனி பேஸ்புக் பதிவுகளை வெளியிட்ட ஊழியரின் முதலாளிகளால், இந்த சம்பவம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

தொற்று உறுதிசெய்யப்பட்டதில் இருந்து ஜூலை 15ஆம் தேதி வரை, ஊழியர் ஒரே அறையில் 11 பேருடன் தொடர்ந்து இருந்துள்ளார், என்று அந்த இரு முதலாளிகளும் தங்கள் பதிவுகளில் கூறியுள்ளனர்.

ஜூலை 13ஆம் தேதி கிருமித்தொற்று உறுதியான பின்னர், ஊழியரை தங்குமிடத்திலிருந்து வெளியேற்றுவதற்கு சுகாதார அமைச்சகம் 24 மணிநேரம் வழங்கியிருந்தது.

ஆய்வின் ஒரு பகுதியாக அந்த ஊழியர் சோதனை செய்யப்பட்டதாக MOH மற்றும் MOM தெரிவித்துள்ளன. அத்தகைய ஒரு ஆய்வில், தங்குமிடங்களில் நோய்த்தொற்று பரவலின் அளவை மதிப்பிடுவதற்கு பல Swab பரிசோதனைகள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு குழுவாக சோதிக்கப்படுகின்றன.

இந்த ஆய்வு சோதனைகள், தனிப்பட்ட சோதனையிலிருந்து மாறுபட்டவை என்றும் அமைச்சுகள் தெளிவுபடுத்தின. மேலும் தனிப்பட்ட ஊழியரிடம் தொற்று பற்றி தீர்மானிக்க அந்தச் சோதனைமுறை பயன்படுத்தப்படுவதில்லை என்று அமைச்சுகள் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க : பொதுப் பேருந்தில் தவறான முறையில் பெண் பயணியை புகைப்படம் எடுத்த ஆடவர் கைது..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg