சிங்கப்பூரில் கூகிள் நிறுவனத்தின் புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் பயிற்சி திட்டம்..!

singapore jobs for graduates

அரசாங்க நிறுவனங்களான பொருளாதார மேம்பாட்டு வாரியம், Infocomm Media Development Authority மற்றும் SkillsFuture Singapore (SSG) ஆகியவற்றுடன் இணைந்து கூகிள் Skills Ignition SG என்ற புதிய வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சித் திட்டத்தை உருவாக்கியுள்ளது.

இந்த புதிய வேலைகள் மற்றும் திறன் பயிற்சியில் சுமார் 3,000 வேலை தேடும் சிங்கப்பூரர்கள் வரை பயனடைவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : “சிங்கப்பூரில் இன நல்லிணக்கத்தை வலுப்படுத்த தொடர் முயற்சிகள் தேவை” – இன நல்லிணக்க நாள் வாழ்த்து கூறிய பிரதமர் திரு. லீ..!

இது நுழைவு நிலையில் உள்ள ஊழியர்கள் மற்றும் நடுத்தர நிலையில் உள்ள ஊழியர்களை இலக்காகக் கொண்ட இரண்டு திட்டங்களை உள்ளடக்கியுள்ளது.

மேலும், இது டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் கிளவுட் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளுக்கு பங்கேற்பாளர்களை தயார்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகிள், கூடுதலாக பட்டதாரிகளுக்குத் தேவையான தொழில்நுட்பத் திறன்களைப் வழங்க 9 மாதப் பயிற்சித் திட்டத்தை தொடங்கியுள்ளது.

இதில் பங்கேற்பவர்களுக்கு இணையம் வாயிலாக பாடங்கள் நடத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் இதில் வேலை பற்றிய அனுபவமும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம், 600 விண்ணப்பதாரர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதில் கவனம் செலுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர் தொடர்பாக ஏற்பட்ட நிர்வாகத் தவறுக்கு மன்னிப்பு கோரிய மனிதவள அமைச்சு, சுகாதார அமைச்சு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg