சிங்கப்பூரில் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்து டூரியான் பழம் பறிக்க முயன்ற 11 பேர் கைது.!

Pic: Durian Picking/FB

சிங்கப்பூரில் உள்ள மண்டாய் (Mandai) சாலையில், பாதுகாக்கப்பட்ட இடத்திற்குள் அத்துமீறி நுழைந்த சந்தேகத்தின் பெயரில் 11 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மாண்டாய் சாலையில் நேற்று (ஜூன் 27) முன்தினம் அதிகாலை நேரத்தில், சிலர் சண்டை போட்டுக்கொண்டிருந்தாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

‘லீ குவான் இயூ’ விருதுப் பெற்ற ஒரே இந்திய மாணவர்!

இந்த சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணையில், அந்த சந்தேக நபர்கள், டூரியான் பழம் பறிப்பதற்காக பாதுகாக்கப்பட்ட மாண்டாய் சாலை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

Woodlands காவல்துறை பிரிவினர், சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களை கண்டுபிடித்து அவர்களை நேற்று (ஜூன் 28) கைது செய்தனர். அவர்களில், 10 ஆண்கள் மற்றும் பெண் ஒருவர் அடங்குவர், இவர்கள் அனைவரும் 25 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

மேலும், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், அத்துமீறல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 1,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் எதிர்காலத்திற்கு பயன்படுத்தும் வகையில், 40 ஹெக்டேர் நிலப்பகுதியை மீட்கத் திட்டம்.!