சிங்கப்பூரில் எதிர்காலத்திற்கு பயன்படுத்தும் வகையில், 40 ஹெக்டேர் நிலப்பகுதியை மீட்கத் திட்டம்.!

Singapore reclaim 40ha land
Pic: Google Maps

சிங்கப்பூரில் எதிர்கால நிலத்தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் வகையில், வடகிழக்குக் கடலோரப் பகுதியில் உள்ள சுமார் 40 ஹெக்டேர் நிலப்பகுதியை மீட்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கான வடிவமைப்பு, உத்தேசச் செலவு, சுற்றுச்சூழலில் அதனால் ஏற்படக்கூடிய தாக்கம் ஆகியவற்றை மதிப்பிட JTC நிறுவனம் ஏலக்குத்தகைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

புக்கிட் மேரா வியூ சந்தை இரண்டு வாரங்களுக்கு பின் மீண்டும் திறப்பு.!

சிங்கப்பூரில் மனிதரால் உருவாக்கப்பட்ட முதல் சதுப்பு நிலப்பகுதிக்கு அருகிலுள்ள இந்த இடம், கடலுக்குள் நீட்டிக்கப்படலாம். இது கிட்டத்தட்ட 60 காற்பந்து திடல்களின் பரப்பளவுக்குச் சமமானதாகும். உத்தேச நிலமீட்பு, இரண்டு இடங்களை உள்ளடக்கியது என்பதை ஏலக்குத்தகை ஆவணங்கள் காட்டுகின்றன.

முதலாவது லோரோங் ஹலூஸ் (Lorong Halus) அணைகரைப் பகுதி, அங்கு நிலமீட்புப் பணி நிறைவு பெறுவதற்கு 7 வருடங்களுக்கு மேல் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், லோரோங் ஹலூஸ் அணைகரையைத் தகர்த்துவிட்டு, தற்காலிகமாக ஓர் அணை கரையைக் கட்டுவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இந்த குறிப்பிட்ட பிளாக்களில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை.!