சிங்கப்பூரில் இந்த குறிப்பிட்ட பிளாக்களில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை.!

Mandatory Covid-19 test residents
Pics: Google Street View

சிங்கப்பூரில் உள்ள ஹெண்டர்சன் கிரெசண்ட் (Henderson Crescent), லெங்கோக் பாரு (Lengkok Bahru) ஆகிய இடங்களில் கொரோனா தொற்று சம்பவங்கள் அதிகரித்து வரும் காரணத்தால், அங்குள்ள குடியிருப்பாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

ஹெண்டர்சன் கிரெசண்ட் பிளாக் 103-ல், 3 குடும்பங்களைச் சேர்ந்த நான்கு பேருக்கு கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. லெங்கோக் பாரு 55, 56, 57 ஆகிய பிளாக்களில் கழிவுநீர் மாதிரிகளில் கிருமிக் கூறுகள் தென்பட்டதையடுத்து, கட்டாய சோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பல் மருத்துவர் மீது தொழில் நடவடிக்கை!

ஹெண்டர்சன் கிரெசண்ட் பிளாக் 103-ல் உள்ள குடியிருப்பாளர்களுக்கும், லெங்கோக் பாரு பிளாக் 55, 56, 57 குடியிருப்பாளர்கள், கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும்
இன்று (ஜூன் 27) முதல் புதன்கிழமை வரை கட்டாய கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்தப்படுகிறது.

மேற்கண்ட இடங்களுக்கு சென்றிருந்தோர்களும் குடியிருப்பாளர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்களும், கிருமித்தொற்று பரிசோதனை செய்துகொள்ள விரும்பினால், அதே நாட்களில் அதனைச் செய்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

குடியிருப்பாளர்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும், குறுஞ்செய்தி வழியாகவும் பரிசோதனை குறித்த மேல் விபரங்கள் தெரிவிக்கப்படும் என சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

“தடுப்பூசிகள் நம்மை எந்த அளவிற்கு நோயில் இருந்து பாதுகாக்கிறது?”- அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் விளக்கம்!