சிங்கப்பூரில் வழிபாட்டுத் தலங்களில் புதிய செயல்முறையுடன் கூடுதல் விதிமுறைகள்..!

12 religious organisations will be allowed to hold services of up to 100 people
Photo: Masjid Jamae (Chulia) website and Facebook / Masjid Sultan Singapore.

சிங்கப்பூரில் சபை மற்றும் வழிபாட்டு தலங்களில் வழிபாட்டாளர்களின் எண்ணிக்கையின் வரம்பு, 50 பேரிலிருந்து 100 பேராக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கலாச்சார, சமூகம் மற்றும் இளையர் அமைச்சகம் (MCCY) தெரிவித்துள்ளது.

இந்த புதிய மாற்றம் வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) முதல் 12 வழிபாட்டுத் தலங்களில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு ஊழியரையும், அவரின் வேலையையும் காப்பாற்ற தயார்; இங் சீ மெங்.!

சிங்கப்பூரின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளின் சமயம் சார்ந்த நடவடிக்கைகள் படிப்படியாக மீண்டும் தொடங்குவதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்தி வெளியீட்டில் MCCY தெரிவித்துள்ளது.

COVID-19 பரவலைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், இந்த 12 வழிபாட்டுத் தலங்களில் 100 பேர் வரை வழிபாட்டு சேவைகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

மேலும், இதில் ஏற்கனவே நடப்பில் உள்ள கிருமி தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கூடுதல் விதிமுறைகள் வலியுறுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் குருத்வாராக்கள் ஆகிய 9 வழிபாட்டுத் தலங்களில் தலா 50 பேர் வரை இரண்டு குழுக்களாக பிரிக்கப்படும், மேலும் ஒவ்வொரு குழுக்களுக்கு இடையில் தடுப்பு இருக்க வேண்டும் என்று MCCY தெரிவித்துள்ளது.

குழுக்ககளிடையே தொடர்பை தவிர்க்க, ஒவ்வொரு குழுவிற்கும் தனித்தனி நுழைவாயில்கள் மற்றும் வெளியேறும் இடங்கள் அல்லது வெளியேறும் நேரங்களும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

(Table: Ministry of Culture, Community and Youth)

பௌத்த, தாவோ, இந்து ஆலயங்களில் வழிபாட்டு மண்டபங்கள் மற்றும் பொது இடங்களிலும் மக்கள் கூட்டமாக கூடாமல் இருப்பது உறுதிசெய்ய வேண்டும்.

மேலும், குழுக்களுக்கு இடையே தொடர்பு இல்லாதது, பாதுகாப்பு இடைவெளி பின்பற்றப்படுவதும் ஆகியவற்றை உறுதிசெய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் 20 வயதை அடைந்தவர்களின் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg