சிங்கப்பூரில் 20 வயதை அடைந்தவர்களின் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகம்..!

Number of suicides among those in their 20s highest in Singapore
Number of suicides among those in their 20s highest in Singapore (Photo: The Indian Express)

சிங்கப்பூரில் தற்கொலைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் மற்ற வயதினருடன் ஒப்பிடும்போது 20 வயதை அடைந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது என்று Samaritans of Singapore (SOS) திங்களன்று (ஆகஸ்ட் 3) தெரிவித்துள்ளது.

இதில் கடந்த 2019ஆம் ஆண்டில், 20 முதல் 29 வயதுக்குட்பட்ட சுமார் 71 பேர் தங்களைத் தாங்களே கொலை செய்துகொண்டுள்ளனர்.

இதையும் படிங்க : பொங்கோல் ஈஸ்ட் ரோட்டில் மூன்று கார்கள் மற்றும் ஒரு டாக்ஸி சம்பந்தப்பட்ட விபத்து..!

அந்த வயதிற்குட்பட்ட தற்கொலை இறப்புகளில் எண்ணிக்கையானது மூன்றில் ஒரு பங்கு என்று தற்கொலை தடுப்பு நிறுவனம் செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நிலவரப்படி, 10 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்களின் மரணத்திற்கு முக்கிய காரணியாக தற்கொலை தொடர்ந்து இருந்து வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டில் 400 தற்கொலைகள் பதிவாகியுள்ளன, இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டில் 397 ஆக இருந்தது. பெரும்பாலான வயதினர்களின் தற்கொலை எண்ணிக்கை சிறிது அதிகரித்துள்ளதாக SOS தெரிவித்துள்ளது.

இருப்பினும், 2019ஆம் ஆண்டில் சிங்கப்பூர் குடியிருப்பாளர்களின் தற்கொலை விகிதம் 100,000க்கு 8.00 ஆகக் குறைந்துள்ளது, இது 2018ஆம் ஆண்டில் 8.36 ஆக இருந்தது.

மேற்குறிப்பிட்ட வயதினரிடமிருந்து வரும் உதவி அழைப்புகளின் எண்ணிக்கை 4,124ஆக உயர்ந்துள்ளது, இந்த எண்ணிக்கை மார்ச் 2019 உடன் முடிவடைந்த முந்தைய நிதியாண்டில் 3,396 அழைப்புகளாக இருந்தது என்று அது மேலும் கூறியுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தங்கும் விடுதியில் ஜன்னல் விளிம்பில் நின்று கொண்டிருந்த வெளிநாட்டு ஊழியர் கைது..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg