சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு ஊழியரையும், அவரின் வேலையையும் காப்பாற்ற தயார்; இங் சீ மெங்.!

Pic: Facebook/ Ng Chee Meng

சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு ஊழியரையும் பாதுகாத்து, அனைவரின் வேலைகளையும் காப்பாற்றத் தயாராக இருப்பதாக தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் (Ng Chee Meng) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூடுதலாக தமது தேசிய தினச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் தொற்று சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகளையும் பொருளியல் ரீதியாகவும், சமூக ரீதியாவும் பாதித்துள்ளது. எனவே, ஆட்குறைப்புக்கும், மேலும் சவால்மிக்க நாள்களுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

இதையும் படிங்க: சிங்கப்பூரை கூடுதல் பசுமைமிக்க நகரமாக மாற்றி பொருளாதாரத்தை ஊக்குவிக்க திட்டம்..!

இருப்பினும், வேலைகளைக் காப்பாற்ற செலவினத்தைக் குறைக்கும் அனைத்து வழிகளும் முதலில் பரிசீலிக்கப்படுவதற்குக் காங்கிரஸ் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட ஊழியர்களைப் புதிய வேலைகளில் சேர்ப்பதற்குத் தொழிற்சங்கங்கள், காங்கிரஸின் வேலைப் பாதுகாப்பு மன்றம், e2i எனப்படும் வேலைவாய்ப்பு, வேலைத்திறன் நிலையம் ஆகியவை முடிந்தவரை செயல்படும் என்றும், புதிய வேலைகளுக்குக் கூடுதல் பயிற்சி தேவையெனில், ஊழியர்களுக்குப் பயற்சி வழங்கப்படுவது உறுதிசெய்யப்படும் என்றும் திரு. இங் தெரிவித்தார்.

ஆட்குறைப்பைத் தவிர்க்க முடியாத நிலையில், காங்கிரஸ் வரையறுத்துள்ள விதிகளின்படி, நிறுவனங்கள் ஊழியர்களை நியாயமான முறையில் நடத்துவதை உறுதிசெய்வதற்குக் காங்கிரஸ் முன்னுரிமை அளிக்கும் என்றார்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் 20 வயதை அடைந்தவர்களின் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகம்..!

மேலும், வலிமைமிக்க சிங்கப்பூரை உருவாக்கத் தொழிலாளர் இயக்கத்தின் பங்காளிகள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg