சிங்கப்பூரை கூடுதல் பசுமைமிக்க நகரமாக மாற்றி பொருளாதாரத்தை ஊக்குவிக்க திட்டம்..!

சிங்கப்பூரை மேலும் பசுமை மிகுந்த, வாழத்தகுதி வாய்ந்த நகரமாக மாற்றியமைப்பதன் மூலம் பொருளியலை ஊக்குவிக்கத் திட்டமிடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்திற்கான ஆறு மாத ஆய்வுக்கான குத்தகை ஒன்றை தேசியப் பருவநிலை மாற்றச் செயலகம் விடுத்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 20 வயதை அடைந்தவர்களின் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகம்..!

இந்த பசுமை திட்டங்களில் உயர்மாடித் தோட்டம், காற்றாலை, சூரியசக்தித் தகடுகள் ஆகியவை அடங்கும்.

சிங்கப்பூரில் 2030ஆம் ஆண்டுக்குள் 80 சதவீதம் பசுமைக் கட்டடங்களாக மாற்றப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிருமித்தொற்று காரணமாக இந்த பசுமையை அதிகரிக்கும் திட்டங்களை ஆதரிக்கும் நோக்கம் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடமும் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய முயற்சிகளின் வழியாக, இதன் வாயிலாக உலக அளவில் சுமார் 4 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள சந்தையில் வாய்ப்புகளை சிங்கப்பூரால் கைப்பற்ற முடியும் என்றும் “செய்தி” குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தங்கும் விடுதியில் ஜன்னல் விளிம்பில் நின்று கொண்டிருந்த வெளிநாட்டு ஊழியர் கைது..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg