சிங்கப்பூரில் 12 முதல் 17 வயது வரையுள்ள சிறுவர்கள் ‘Nuvaxovid’ தடுப்பூசிப் போட்டுக் கொள்ளலாம் என அறிவிப்பு!

சிங்கப்பூரில் 12 முதல் 17 வயது வரையுள்ள சிறுவர்கள் 'Nuvaxovid' தடுப்பூசிப் போட்டுக் கொள்ளலாம் என அறிவிப்பு!
File Photo

 

சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் (Ministry Of Health, Singapore) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று, சிங்கப்பூரில் வசிக்கும் 12 முதல் 17 வயது வரையுள்ள சிறுவர்கள் இனி ‘Nuvaxovid/ Novavax’ தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.

‘NTUC FairPrice’ பேரங்காடிகளில் இந்தோனேசிய முட்டைகள் விற்பனை!

வரும் மே 15- ஆம் தேதியில் இருந்து பொது சுகாதார மருந்தகங்களில் ‘Nuvaxovid’ தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். இந்த வகை தடுப்பூசியை சிறுவர்கள் மூன்று முறை போட்டுக் கொள்வது நல்லது. மேலே குறிப்பிட்டுள்ள வயதுடைய சிறுவர்கள் ‘Pfizer- BioNTech’ தடுப்பூசியைப் போட முடியாவிட்டாலும் (அல்லது) mRNA அல்லாத தடுப்பூசியைப் போட விரும்பினால் ‘Nuvaxovid’ தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.