ஆசியான் பாரா போட்டிகள் கம்போடியாவில் தொடங்கியது!

ஆசியான் பாரா போட்டிகள் கம்போடியாவில் தொடங்கியது!
File Photo

 

12வது ஆசியான் பாரா போட்டிகள் (12th ASEAN Para Games) இன்று (ஜூன் 03) கம்போடியா நாட்டின் தலைநகர் ப்னோம் பென் (Phnom Penh) நகரில் கோலாகலமாகத் தொடங்கியது. இதில், புரூணை, மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, மியான்மர், ஈஸ்ட் திமோர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், லாவோஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டுள்ளனர்.

நீண்ட நாட்கள் தங்கி சிங்கப்பூரில் வேலை செய்ய போலி ஆவணங்களை சமர்ப்பித்த வெளிநாட்டவருக்கு சிறை

முதன்முறையாக, ஆசியான் பாரா போட்டிகளை கம்போடியா தலைமையேற்று நடத்துகிறது. ஜூன் 03- ஆம் தேதி முதல் ஜூன் 09- ஆம் தேதி வரை ஆசியான் பாரா போட்டிகள் நடைபெறவுள்ளது. இன்று நடைபெற்ற போட்டிகளில் தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் பதக்க வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.

பதக்கப் பட்டியலில், தாய்லாந்து அணி 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் ஆகிய 4 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து, கம்போடியா, இந்தோனேசியா அணிகள் தலா 1 தங்கத்தை வென்று அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

மலேசியா அணி 1 வெள்ளி, 1 வெண்கலத்துடன் நான்காவது இடத்திலும், பிலிப்பைன்ஸ் அணி 1 வெள்ளியுடனும், லாவோஸ் 1 வெண்கலத்துடனும் பதக்கப் பட்டியலில் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

உணவகங்களில் ஜூன் 1 முதல் கடும் நடவடிக்கை – முதல்நாளே சிக்கிய நபர்

இந்த போட்டியில் பங்கேற்றுள்ள சிங்கப்பூர் அணியின் வீரர்களுக்கு, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.