சிங்கப்பூரில் சமூக அளவில் புதிதாக 18 பேர், வெளிநாட்டில் இருந்து வந்தவர் 7 பேர் பாதிப்பு..!

136 new Covid-19 cases in Singapore, including 18 in community and 7 imported
136 new Covid-19 cases in Singapore, including 18 in community and 7 imported

சிங்கப்பூரில் நண்பகல் (ஜூலை 5) நிலவரப்படி, புதிதாக 136 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 44,800ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : வேலை வாய்ப்புகளை உருவாக்குவது கடுமையான சவால் – பிரித்தம் சிங்..!

புதிய சம்பவங்களில், 18 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

அதில் 6 பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் என்றும், 12 பேர் வேலை அனுமதி பெற்றவர் என்றும் சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

கூடுதலாக, வெளிநாட்டில் இருந்து வந்தவர் 7 பேர் இதில் அடங்குவர் என்று MOH தெரிவித்துள்ளது.

இதில் அதிகமானவர்கள் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் ஆவார்கள்.

இந்த புதிய சம்பவங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள், பின்னர் செய்திக்குறிப்பில் பகிரப்படும் என்றும் MOH தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : லிட்டில் இந்தியாவில் கமலா உணவகம் உள்ளிட்ட இடங்களுக்கு COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்தனர்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg