லிட்டில் இந்தியாவில் கமலா உணவகம் உள்ளிட்ட இடங்களுக்கு COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்தனர்..!

COVID-19: SAFRA Tampines, Yio Chu Kang Sports Hall among new places visited by community cases
COVID-19: SAFRA Tampines, Yio Chu Kang Sports Hall among new places visited by community cases (Photo: Google StreetView)

COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியலில் மேலும் சில இடங்களைச் சுகாதார அமைச்சகம் (MOH) சேர்த்துள்ளது.

புதிதாக சேர்க்கப்பட்ட இடங்களில் Yio Chu Kang விளையாட்டு அரங்கம் மற்றும் சஃப்ரா தெம்பனீஸ் ஆகிய இடங்களை சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் SGUnited Jobs and Skills திட்டத்தில் சுமார் 16,000 வேலைகள், பயிற்சி வாய்ப்புகள் அறிமுகம்..!

ஜூன் 21 மற்றும் ஜூன் 27 ஆகிய தேதிகளில் Yio Chu Kang விளையாட்டு அரங்கிற்கு இரண்டு வருகைகள் பதிவு செய்யப்பட்டன.

ஒரு நோயாளி ஜூன் 20 அன்று Buffalo ரோட்டில் உள்ள கமலா உணவகத்திற்கு சென்றுள்ளார்.

குறிப்பிட்ட அந்த இடங்களில் இருந்தவர்கள், அங்கு சென்றுவந்த நாளிலிருந்து 14 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் MOH கூறியுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை 60,000 குறைந்துள்ளது – மனிதவள அமைச்சர்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg