சிங்கப்பூர் SGUnited Jobs and Skills திட்டத்தில் சுமார் 16,000 வேலைகள், பயிற்சி வாய்ப்புகள் அறிமுகம்..!

More retrenchments in Singapore

SGUnited Jobs and Skills திட்டத்தில் 16,000க்கும் மேற்பட்ட வேலைகள், பயிற்சி மற்றும் திறன் பயிற்சி வாய்ப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதில், கிட்டத்தட்ட 7,000 வேலைகள் பொது மற்றும் தனியார் துறைகளை சேர்ந்தவை, புதிய பட்டதாரிகள் மற்றும் வேலையின் நடுப்பகுதியில் வேலை தேடுவோர் அவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மீண்டும் திறக்கப்படவுள்ள திரையரங்குகள்..!

இந்த ஆண்டு சிங்கப்பூரின் நான்காவது பட்ஜெட்டின் போது SGUnited Jobs and Skills ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது.

COVID-19 தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் மத்தியில் 100,000 வேலைகள், பயிற்சி மற்றும் திறன் பயிற்சி வாய்ப்புகளை உருவாக்குவது இதன் நோக்கமாக உள்ளது.

உற்பத்தி, F&B, லாஜிஸ்டிக்ஸ், உடல்நலம் போன்ற வர்த்தக நிறுவனங்கள் உட்பட நேற்று வேலைவாய்ப்பு சந்தையில் சுமார் 70 நிறுவனங்கள் பங்கேற்றன.

மேலும், சுமார் 6,000க்கும் அதிகமான பயிற்சி திட்டங்களும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டன.

இந்த வேலைவாய்ப்புகளில் 70 சதவிகிதம் பொதுத்துறையை சேர்ந்தவை, இதில் COVID-19 தொடர்பானவை, சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் ஆகியவை அடங்கும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை 60,000 குறைந்துள்ளது – மனிதவள அமைச்சர்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg