சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை 60,000 குறைந்துள்ளது – மனிதவள அமைச்சர்..!

(Photo: yahoo)

சிங்கப்பூரில் இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரை வெளிநாட்டு ஊழியர்களின் வேலைவாய்ப்பு எண்ணிக்கை 60,000 குறைந்துள்ளது என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் தியோ கூறியுள்ளார்.

வேலைகளை பாதுகாத்தல் மற்றும் வாழ்வாதாரங்களை பாதுகாத்தல் போன்ற நோக்கங்களை நிறைவேற்ற வேலைவாய்ப்பு ஆதரவு திட்டம் உதவுகிறது.

இதையும் படிங்க : தெம்பனீஸ் சாலையில் விபத்து – 6 வயது சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்..!

மேலும் இதன் விளைவாக, நிறுவனங்கள் தங்கள் உள்ளூர் ஊழியர்களுடன் தொடரலாமா அல்லது வெளிநாட்டு ஊழியர்களுடன் தொடரலாமா என்பது குறித்து ஒரு முடிவை எடுக்க வேண்டியிருக்கும் போது, ​​அரசாங்கத்தின் ஆதரவு எங்குள்ளது என்பதை அவை கருத்தில்கொள்ளவேண்டும், அதன்படி அவர்கள் முடிவுகளை முடிவெடுக்கவேண்டும் என்று திருமதி தியோ கூறினார்.

COVID-19 சூழலில் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியிலும், மார்ச் முதல் SGUnited வேலைகள் முயற்சியின் கீழ் 12,000 பேர் புதிய வேலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதையும் திருமதி தியோ குறிப்பிட்டார்.

மேலும் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள், முதலில் தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூர் பொத்தோங் பாசிர் பிளாட்டுக்குள் சடலம் ஒன்று கண்டெடுப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg