தெம்பனீஸ் சாலையில் விபத்து – 6 வயது சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்..!

6-year-old girl injured in accident in Tampines involving 2 taxis and minibus
6-year-old girl injured in accident in Tampines (Photo: STOMP)

தெம்பனீஸ் சாலை மற்றும் Defu அவென்யூ 1 சந்திப்பில் இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 3) விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் காயமடைந்த ஆறு வயது சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதையும் படிங்க : சிங்கப்பூர் கொரோனா அப்டேட் (ஜூலை 3) : சமூக அளவில் 11 பேர் – வெளிநாட்டில் இருந்து வந்த 3 பேர் பாதிப்பு..!

இரண்டு டாக்சிகள் மற்றும் ஒரு சிற்றுந்து ஆகியவை இந்த விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 8.30 மணியளவில் இந்த விபத்து குறித்து காவல்துறை மற்றும் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (SCDF) ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி, சிற்றுந்தில் பயணித்தவர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

SCDF ஆம்புலன்சில் கே.கே பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அந்த சிறுமி சுயநினைவுடன் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் பொத்தோங் பாசிர் பிளாட்டுக்குள் சடலம் ஒன்று கண்டெடுப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg