சிங்கப்பூர் கொரோனா அப்டேட் (ஜூலை 3) : சமூக அளவில் 11 பேர் – வெளிநாட்டில் இருந்து வந்த 3 பேர் பாதிப்பு..!

169 new Covid-19 patients in Singapore, including 11 in the community
169 new Covid-19 patients in Singapore, including 11 in the community

சிங்கப்பூரில் நண்பகல் (ஜூலை 3) நிலவரப்படி, புதிதாக 169 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 44,479ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : GE2020: சிங்கப்பூரில் தேர்தல் பதாகைகள் சேதம் – இருவரிடம் விசாரணை..!

புதிய சம்பவங்களில், 11 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

அதில் 3 பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் என்றும், 8 பேர் வேலை அனுமதி பெற்றவர் என்றும் சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மூவர் இதில் அடங்குவர் என்று MOH தெரிவித்துள்ளது.

இதில் அதிகமானவர்கள் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் ஆவார்கள்.

இந்த புதிய சம்பவங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள், பின்னர் செய்திக்குறிப்பில் பகிரப்படும் என்றும் MOH தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் பொத்தோங் பாசிர் பிளாட்டுக்குள் சடலம் ஒன்று கண்டெடுப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg