சிங்கப்பூரில் மீண்டும் திறக்கப்படவுள்ள திரையரங்குகள்..!

COVID-19: Cinemas can reopen on Jul 13 with maximum of 50 patrons per hall
Cinemas can reopen on Jul 13 (Photo: Today)

சிங்கப்பூரில் உள்ள திரையரங்குகள் ஜூலை 13 முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளன, ஒவ்வொரு திரையரங்குகளிலும் பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகள் காரணமாக 50 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள்.

COVID-19 பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், சிங்கப்பூர் தழுவிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கடந்த மார்ச் 26 முதல் திரையரங்குகள் மூடப்பட்டன.

இதையும் படிங்க : COVID-19: இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வந்த 3 பேர் நோய்த்தொற்றால் பாதிப்பு..!

கடந்த ஜூன் 19 அன்று தொடங்கிய சிங்கப்பூரின் 2ஆம் கட்டத்தின் ஒரு பகுதியாக வர்த்தகங்கள் தற்போது படிப்படியாக மீண்டும் தொடங்கப்பட்டு வருகின்றன.

நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் ஐந்து பேர் வரை 1மீ பாதுகாப்பு இடைவெளி இல்லாமல் திரையரங்குகளில் ஒன்றாக அமரலாம் என்று தொடர்புதகவல் ஊடக மேம்பாட்டு ஆணையம் (IMDA) தெரிவித்துள்ளது.

இருப்பினும், மற்ற நபர்கள் 1 மீட்டர் பாதுகாப்பான இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று IMDA கூறியுள்ளது.

திரையரங்குகளில், உணவு மற்றும் பானங்களை உட்கொள்ளும் போது தவிர, மற்ற எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டும்.

மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்ட திரையரங்குகள்:
  • Golden Village
  • Cathay Cineplexes
  • Shaw Theatres
  • Filmgarde
  • WE Cinemas
  • The Projector
  • Eaglewing Cinematics
  • Carnival Cinemas
  • Salt Media@Capital Tower

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை 60,000 குறைந்துள்ளது – மனிதவள அமைச்சர்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg