சிங்கப்பூரில் புதிதாக 14 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

14 new COVID-19 infections in Singapore
14 new COVID-19 infections in Singapore, including 9 imported cases: MOH (Photo : Straits Times)

சிங்கப்பூரில் புதிதாக 14 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று (மார்ச் 15) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 226ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 14 விமானங்கள் சென்னை செல்லவில்லை; மொத்தம் 28 விமானங்கள் ரத்து..!

சிங்கப்பூரில் கொரோனா சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டதில் இருந்து, தினசரி சம்பவங்களில் இந்த எண்ணிக்கை தான் அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குணமடைந்தோர்

மேலும், அன்றைய நிலவரப்படி மருத்துவமனையிலிருந்து யாரும் குணமடைந்து வீடு திரும்பவில்லை.

தற்போது வரை மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 105ஆக உள்ளது.

மருத்துவமனையில் உள்ளோர்

மருத்துவமனையில் இன்னும் 121 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் உள்ள பெரும்பாலானோரின் உடல்நிலை சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகிறது என்று MOH குறிப்பிட்டுள்ளது.

மேலும், 13 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

இதையும் படிங்க : சிரமத்திற்கு மன்னிப்பு கோரிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்; வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது..!

புதிய சம்பவங்கள்

புதிதாகக் கிருமித்தொற்றியவர்களில் 9 பேர் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள் (சம்பவங்கள் 213, 215, 216, 217, 220, 222, 223, 225 மற்றும் 226).

இருவர் சாஃப்ரா ஜூரோங் குழுமத்துடன் தொடர்புடையவர்கள் (சம்பவங்கள் 218 மற்றும் 224).

மூன்று பேர் முன்னர் இந்த கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவரோடு தொடர்புடையவர்கள்.

#coronavirus Singapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil