பலத்த காற்று… கடலில் விழுந்த கொள்கலன்கள் – தற்போதைய நிலை என்ன?

Keppel Terminal 15 empty containers blown into sea

பலத்த காற்று காரணமாக கெப்பல் முனையத்தில் இருந்த பதினைந்து காலி கொள்கலன்கள் கடலில் விழுந்ததாக PSA Corp தெரிவித்துள்ளது.

நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

கட்டுமான நிறுவனத்தின் கிரேன் கவிழ்ந்து விபத்து

மேலும் இந்த சம்பவத்தால் துறைமுகத்திலோ அல்லது அதன் செயல்பாடுகளிலோ எந்த இடையூறும் ஏற்படவில்லை என்று PSA தெரிவித்துள்ளது.

அன்று வியாழன் பிற்பகல் 3 மணியளவில் 15 காலி கொள்கலன்கள் விழுந்ததாக சிங்கப்பூர் கடல் மற்றும் துறைமுக ஆணையம் (MPA) அறிக்கையில் தெரிவித்தது.

இந்நிலையில் அந்த 15 கொள்கலன்களும் மீட்டெடுக்கப்பட்டதாக அது குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூரோங் ஈஸ்ட் MRT ரயில் நிலையத்தில் ஆடவர் செய்த செயல்: கடுப்பான நெட்டிசன்கள்… போலீசில் புகார்