“சிங்கப்பூரில் 16 வயது சிறுமியைக் காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்!

"சிங்கப்பூரில் 16 வயது சிறுமியைக் காணவில்லை"- தகவல் கொடுக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்!
Photo: Singapore Police Force

 

சிங்கப்பூரில் 16 வயது சிறுமியை மூன்று நாட்களாக காணவில்லை என்றும், தகவல் கொடுக்குமாறு பொதுமக்களுக்கு சிங்கப்பூர் காவல்துறை (Singapore Police Force) வேண்டுகோள் விடுத்துள்ளது.

‘மஹா சிவராத்திரி 2024’- ஸ்ரீ சிவன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கவனத்திற்கு!

இது தொடர்பாக, சிங்கப்பூர் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிங்கப்பூரில் வசித்து வந்த 16 வயது சிறுமியை கடந்த பிப்ரவரி 21- ஆம் தேதி முதல் காணவில்லை. சிறுமியை யாரேனும் பார்த்தாலோ அல்லது சிறுமி பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தாலோ உடனடியாக சிங்கப்பூர் காவல்துறையின் 999 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து தகவல் கொடுக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நோயாளியை சோதனை செய்யாமல் S$5.99 கட்டணத்தில் மருத்துவ சான்றிதழ்.. சிக்கிய மருத்துவர்

அத்துடன், காணாமல் போன சிறுமியின் புகைப்படத்தையும் காவல்துறை, ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.