‘மஹா சிவராத்திரி 2024’- ஸ்ரீ சிவன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கவனத்திற்கு!

Photo: Sri Sivan Temple

 

சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ சிவன் கோயிலில் (Sri Sivan Temple) வரும் மார்ச் 08- ஆம் தேதி இரவு 07.00 மணி முதல் மார்ச் 09- ஆம் தேதி காலை 07.00 மணி வரை மஹா சிவராத்திரி பூஜைகள் (Maha Sivarathiri Prayers) நடைபெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) அறிவித்துள்ளது.

சிங்கப்பூர் TOTO லாட்டரி: வெளிநாட்டவர்களுக்கும் டிக்கெட் வாங்கும் நபர் – அதுவும் இலவசமாக

‘மஹா சிவராத்திரி 2024’-ஐ முன்னிட்டு, ஸ்ரீ சிவன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கான முக்கிய அறிவிப்பை இந்து அறக்கட்டளை வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், “மஹா சிவராத்திரி நாளான மார்ச் 08- ஆம் தேதி அன்று மாலை 06.00 மணி முதல் மறுநாள் காலை 06.00 மணி வரை ஸ்ரீ சிவன் கோயில் திறந்திருக்கும். எனினும், மஹா சிவராத்திரி நாளன்று இரவு 08.30 மணி முதல் இரவு 11.30 பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, பக்தர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு கோயிலுக்கு வருகைத் தந்து சிவனை தரிசிக்கலாம்.

65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கோயிலின் ஆத்மலிங்கம் நுழைவு வாயில் வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பக்தருடன் ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் பொது வரிசையில் நின்று சன்னதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யலாம்.

'மஹா சிவராத்திரி 2024'- ஸ்ரீ சிவன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கவனத்திற்கு!

“இந்தியர்கள் ஓராண்டில் 180 நாட்கள் வரை தங்கலாம்…..புதிய விசா அறிமுகம்….அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நாடு!”

பிரதான கூடாரத்திற்குள் காலணிகள் அனுமதிக்கப்படாது. பிரதோஷ பூஜைகளுக்கு பின்னர் மாலை 05.00 மணியவில் கோயில் நடை மூடப்பட்டு, மஹா சிவராத்திரி பிரார்த்தனைகளுக்காக கோயில் தயார் செய்து, மாலை 06.30 மணியளவில் கோயில் நடை மீண்டும் திறக்கப்படும்.

தங்கள் சேவைகளை வழங்க முன்வந்துள்ள உங்களைப் போன்ற பக்தர்களான தொண்டூழியர்களுடன் ஒத்துழைத்து தரிசனம் பெற்று செல்லுங்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பக்தர்களுக்கு கோயிலுக்கு செல்வதற்கான கூகுள் வரைப்படத்தையும் இந்து அறக்கட்டளை வாரியம் வெளியிட்டுள்ளது.

நோயாளியை சோதனை செய்யாமல் S$5.99 கட்டணத்தில் மருத்துவ சான்றிதழ்.. சிக்கிய மருத்துவர்

இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு இந்து அறக்கட்டளை வாரியத்தின் https://heb.org.sg/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.