நோயாளியை சோதனை செய்யாமல் S$5.99 கட்டணத்தில் மருத்துவ சான்றிதழ்.. சிக்கிய மருத்துவர்

clinic-investigated-issuing-mcs-without-consultation
Google Maps

நோயாளியை சோதிக்காமல் மருத்துவ சான்றிதழ்களை (MC) வழங்கியதாக மெட்ஸ்டார் (Medstar) மெடிக்கல் கிளினிக் & சர்ஜரி மருந்தகத்திடம் விசாரணை நடத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

ஆடியோ அல்லது வீடியோ ஆலோசனை இல்லாமல் மருத்துவ சான்றிதழ்களை (MCs) வழங்குவதாக அதன் டெலிமெடிசின் இணையதளமான PocketCare இல் குறிப்பிடப்பட்டிருந்தது.

சிங்கப்பூர் TOTO லாட்டரி: வெளிநாட்டவர்களுக்கும் டிக்கெட் வாங்கும் நபர் – அதுவும் இலவசமாக

மேலும், நோயாளிகள் வெறும் ஐந்து நிமிடங்களில் S$5.99 செலுத்தி மருத்துவ சான்றிதழ்களை பெற முடியும் என்றும், அதற்கு வீடியோ ஆலோசனை தேவையில்லை என்றும் மருந்தகம் விளம்பரம் செய்தது தொடர்பில் இந்த மாதம் தகவல் கிடைத்ததாக சுகாதார அமைச்சகம் (MOH) கூறியது.

இதனை அடுத்து, நோயாளிகளுடன் எந்தவித ஆடியோ அல்லது வீடியோ தொடர்பு இல்லாமல் மருத்துவ சான்றிதழ்களை அது வழங்கியது விசாரணையில் கண்டறியப்பட்டதாக அமைச்சகம் இன்று (பிப் 23) தெரிவித்தது.

மருத்துவச் சான்றிதழ்களை வழங்கிய டாக்டர் விக்னேஷ் சண்முகம் மீது விசாரணை தொடர்கிறது.

கூடுதலாக, சிங்கப்பூர் மருத்துவக் கவுன்சிலின் நெறிமுறைகளை அவர் மீறியதற்கான சாத்தியம் குறித்தும் விசாரணை நடத்த கவுன்சிலுக்கு MOH பரிந்துரைத்துள்ளது.

Work permit மற்றும் S$482.80 பணத்துடன் கீழே கண்டெடுக்கப்பட்ட பர்ஸ்.. உரியவரிடம் சேர உதவுங்கள்