Work permit மற்றும் S$482.80 பணத்துடன் கீழே கண்டெடுக்கப்பட்ட பர்ஸ்.. உரியவரிடம் சேர உதவுங்கள்

work permit found
Zimmy Bin Peter Bagang/Facebook

சாங்கி பிசினஸ் பார்க்கில் வேலை அனுமதி (Work permit) அட்டை மற்றும் ரொக்க பணத்துடன் பர்ஸ் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஒருவர் பகிர்ந்துள்ளார்.

பர்ஸில் சுமார் S$482.80 ரொக்க பணம் இருந்ததாகவும் அவர் Facebook இல் பகிர்ந்துள்ளார்.

லாரியில் பயணித்த 7 நண்பர்கள்.. மரத்தில் மோதி விபத்து.. இருவர் மரணம் – ஓட்டுநருக்கு சிறை மற்றும் தடை

Zimmy Bin Peter Bagang என்ற ஆடவர், நேற்று பிப்.21 இரவு 9 மணியளவில் பர்ஸை கண்டுபிடித்ததாகக் கூறினார்.

மேலும் அந்த வேலை அனுமதி அட்டை, வாங் டெஃபெங் என்ற ஊழியருக்கு சொந்தமானது என்றும் அவர் பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

வாங், Santa Logistic பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும் அதில் சொல்லப்பட்டுள்ளது.

அவரை பற்றி தெரிந்தவர்கள் தகவல் கொடுக்குமாறு அவர் சொன்னார்.

இல்லையெனில், பேஸ்புக் மூலம் தன்னை தொடர்பு கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“நல்லதைச் செய்வோம், நல்லேதே நடக்கும்” என்ற வசனத்தையும் அவர் அதில் பதிவிட்டுள்ளார்.

சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் திடலிலே வைக்கப்பட்ட உணவு – தற்போது மாறியுள்ளதாக நன்றி சொல்லும் ஊழியர்கள்