சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் திடலிலே வைக்கப்பட்ட உணவு – தற்போது மாறியுள்ளதாக நன்றி சொல்லும் ஊழியர்கள்

சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்
(PHOTO: Roslan Rahman/ AFP /Getty Images)

சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தற்போது சுத்தமான உணவு கிடைக்கும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

முறையாக செயல்படாத தங்கும் விடுதி ஆபரேட்டர்களுக்கு மனிதவள அமைச்சகம் (MOM) உத்தரவிட்டதைத் தொடர்ந்து இது சாத்தியமானதாக சொல்லப்பட்டுள்ளது.

ஊழியர்களின் சம்பள விவரங்களை சமர்பிப்பது கட்டாயம் – மார்ச் 1 வரை கெடு

அதாவது, தங்கும் விடுதிகளுக்கு வெளியே ஊழியர்களுக்கான உணவு கவனிக்கப்படாமல் விடப்படுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (ST) வெளியிட்ட பிரத்யேக செய்தியை தொடர்ந்து அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சில உணவு வழங்கும் நிறுவனங்கள், முன்பு விடுதி அறைகளுக்கு வெளியே உணவுப் பொட்டலங்களை விட்டுச் சென்றுள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் சில சமயங்களில் அருகிலுள்ள திடல்களிலும் கூட உணவுப் பொட்டலங்களை விட்டுச் சென்றுள்ளனர்.

இதன் காரணமாக, வெளிநாட்டு ஊழியர்கள் பல மணி நேரம் வேலை முடிந்து வந்து பார்க்கும்போது உணவுகள் கெட்டுப்போய் விடுகின்றன.

ஆனால் தற்போது நிலைமை மேம்பட்டுள்ளதாக அந்த நான்கு தங்கும் விடுதிகளில் உள்ள ஊழியர்கள் சமீபத்தில் STயிடம் தெரிவித்தனர்.

முன்பு ஊழியர்களுக்கான உணவுப் பொட்டலங்களை முறையாக கவனிக்காத 10 விடுதிகளில் அந்த நான்கும் அடங்கும்.

செனோகோ வே, கிராஞ்சி ரோடு மற்றும் அட்மிரால்டி ரோடு வெஸ்ட் ஆகிய நான்கு இடங்களில் உள்ள தங்கும் விடுதிகளில் முன்பெல்லாம் திடலிலும் நடைபாதைகளிலும் உணவு பொட்டலங்கள் காணப்படும். ஆனால் தற்போது அந்த நிலை மாறியுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

“(முன்பு) திடலில் வைக்கப்படும் உணவு பொட்டலங்களை எடுக்க செல்லும்போது மழை, பாம்புகள் மற்றும் எலிகளை எதிர்கொண்டோம்” என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 41 வயதான திரு கருப்பையா கூறினார்,

ஆனால், “தற்போது தங்கும் விடுதிக்குள்ளே பாதுகாப்பான முறையில் உணவை பெற்றுக்கொள்ள முடிகிறது, MOM க்கு நன்றி” என்றும் அவர் சொன்னார்.

“செய்யும் வேலையை பொறுப்புடன் செய்யணும்” – ஊழியரின் மோசமான செயலால் கடுப்பான பெண்