ஊழியர்களின் சம்பள விவரங்களை சமர்பிப்பது கட்டாயம் – மார்ச் 1 வரை கெடு

employers failed to file employees income information
(Photo: Reuters)

தானாகச் சேர்த்தல் திட்டத்தில் (AIS) உள்ள 10 முதலாளிகளில் ஒருவர், ஊழியர்களின் சம்பளம் தொடர்பான வருமான விவரங்களை சரியான நேரத்தில் தாக்கல் செய்யவில்லை என உள்நாட்டு வருவாய் ஆணையம் (Iras) தெரிவித்துள்ளது.

முதலாளிகளுக்கு பலமுறை நினைவூட்டப்பட்டும், சரியான நேரத்தில் அவர்கள் அதை சமர்ப்பிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.

“செய்யும் வேலையை பொறுப்புடன் செய்யணும்” – ஊழியரின் மோசமான செயலால் கடுப்பான பெண்

2023 இல், AIS திட்டத்தின்கீழ் ஊழியர்களின் சம்பள விவரத்தை சேர்க்காத 900க்கும் மேற்பட்ட முதலாளிகள் அபாரதத்தை எதிரிகொண்டனர்.

இதன் காரணமாக அவர்களுக்கு $1 மில்லியனுக்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டது.

அந்த அபராதம் விதிக்கப்பட்ட பெரும்பாலான முதலாளிகள் உணவகங்கள், ஃபுட்கோர்ட்டுகள், காபி கடைகள், பொது ஒப்பந்ததாரர்கள், மொத்த பொருட்கள் வர்த்தகர்கள், சில்லறை வர்த்தகர்கள் மற்றும் அழகு நிலையங்கள் மற்றும் ஸ்பா சேவைகள் ஆகிய நிறுவனத்தை சேர்ந்தவர்கள்.

மார்ச் 1 ஆம் தேதிக்குள் தங்கள் ஊழியர்களின் வருமான விவரங்களை சமர்ப்பிக்குமாறு முதலாளிகளுக்கு Iras நினைவூட்டியது.

இது AIS திட்டத்தில் இணைந்துள்ள நிறுவனங்கள் அல்லது 2023 ஆம் ஆண்டில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று Iras கூறியது.

அதனை சமர்பிக்காமல் இருப்பது குற்றமாகும்.

சிங்கப்பூரில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களுக்கும் கட்டணம் உயரும்