லாரியில் பயணித்த 7 நண்பர்கள்.. மரத்தில் மோதி விபத்து.. இருவர் மரணம் – ஓட்டுநருக்கு சிறை மற்றும் தடை

man-crash-lorry-jailed
Singapore Roads Accident/Facebook

கவனமின்றி வாகனம் ஓட்டி மரணத்தை விளைவித்த ஆடவருக்கு 31 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கவனமின்றி வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியது மற்றும் கவனிப்பு இல்லாமல் வாகனம் ஓட்டி கடுமையான காயத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.

சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் திடலிலே வைக்கப்பட்ட உணவு – தற்போது மாறியுள்ளதாக நன்றி சொல்லும் ஊழியர்கள்

26 வயதான முஹம்மது அஸ்-சையுதி செலாமத் என்ற அவர் தனது நண்பர்கள் ஏழு பேருடன் லாரியில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது ​​கட்டுப்பாட்டை இழந்த வாகனம், ஓல்ட் ஜூரோங் சாலையில் உள்ள மரத்தின் மீது மோதியது.

இதில் பயணிகளில் இருவர் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு கடும் காயங்கள் காரணமாக இறந்தனர் என்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (ST) தெரிவித்தது.

சிறை தண்டனை முடிந்த பின்னர், அவர் எட்டு ஆண்டுகளுக்கு அனைத்து வகை ஓட்டுநர் உரிமங்களையும் வைத்திருக்கவோ அல்லது பெறவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களின் சம்பள விவரங்களை சமர்பிப்பது கட்டாயம் – மார்ச் 1 வரை கெடு