371 கிராம் போதைபொருளுடன் சிக்கிய 17 வயது சிறுவன் கைது

Pexels

South Buona Vista சாலையில் 17 வயது சிறுவன் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு அருகில் இருந்து சுமார் 371 கிராம் போதைவஸ்துக்களை CNB கண்டுபிடித்ததை அடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

“என்ன பெத்த அம்மாவையே தப்பா பேசுவியா..” – கடை உரிமையாளரை பொளந்த மகன் (வீடியோ)

லோயர் டெல்டா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தின் அடிப்படையில் 14 வயது சிறுவனை CNB அதிகாரிகள் கைது செய்தனர்.

அந்த சிறுவனின் வீட்டில் இருந்து சுமார் 9 கிராம் கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தீவு முழுவதும் கடந்த நவம்பர் 6 மற்றும் 11க்கு இடையில் CNB அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட ஆக இளைய சந்தேக நபர் இவர் ஆவார்.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக கடல் உணவு, இறைச்சிகளை இறக்குமதி செய்த கடைக்கு அபராதம்