வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக கடல் உணவு, இறைச்சிகளை இறக்குமதி செய்த கடைக்கு அபராதம்

Illegal import Minimart fined
SFA

மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக கடல் உணவு மற்றும் இறைச்சி பொருட்களை இறக்குமதி செய்ததற்காக, கடை நடத்துனர் ஒருவருக்கு S$10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

லேபில் என்னும் குறிப்புத் தாள் இல்லாத இறைச்சியை விற்பனைக்கு வைத்திருந்ததற்காக டிராவலிங் ஆர்ட் (Travelling Art) நிறுவனத்திற்கு S$4,000 அபராதம் விதிக்கப்பட்டது.

கார் நிறுத்துமிடம், வாகனங்கள், உடற்பயிற்சி நிலையங்களில் நாசவேலை – 4 பேர் கைது

கடந்த ஆண்டு நவம்பரில், சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) அதிகாரிகள் உபி அவென்யூ 1 மினிமார்ட்டை ஆய்வு செய்தனர்.

அப்போது, அனுமதி பெறாமல் இறக்குமதி செய்யப்பட்ட142.69 கிலோ கடல் உணவுகள் மற்றும் இறைச்சி பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

அதே வேளையில் 39 கிலோ எடையுள்ள கோழி, மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியும் கைப்பற்றப்பட்டது.

சிங்கப்பூரில், SFA அமைப்பிடம் அதன் தேவைகளைப் பூர்த்தி செய்த பிறகு தான் உணவு பொருட்கள் இறக்குமதி செய்ய வேண்டும்.

தன் 105 கிலோ எடை சாதனையை முறியடிக்க முனைப்பு காட்டும் 60 வயது இளைஞர்… முன்மாதிரியாக திகழும் அமைச்சர் க.சண்முகம்!