“என்ன பெத்த அம்மாவையே தப்பா பேசுவியா..” – கடை உரிமையாளரை பொளந்த மகன் (வீடியோ)

Bukit Timah Shopping Centre attack

தன் தாயை அவமதித்ததாக குற்றம் சாட்டிய ஆடவர் ஒருவர் வண்ணமீன் கடை உரிமையாளர் ஒருவரை பலமாக தாக்கினார்.

அந்த ஆடவரின் தாயைப் பற்றி உரிமையாளர் ஏதும் பேசவில்லை என மறுத்தபோதும்கூட கடை உரிமையாளருக்கு குத்து விழுவதை இந்த சம்பவத்தின் வீடியோ மூலம் காண முடிந்தது.

வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக கடல் உணவு, இறைச்சிகளை இறக்குமதி செய்த கடைக்கு அபராதம்

இச்சம்பவம் கடந்த அக்டோபர் 31 அன்று பிற்பகல் 3.30 மணியளவில் புக்கிட் திமா ஷாப்பிங் சென்டரில் உள்ள ஸ்பெக்ட்ரம் பெட்டா கடைக்கு வெளியே நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் போலீஸ் வரை சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை உறுதிப்படுத்திய போலீசார், இந்த விஷயத்தை விசாரித்து வருகின்றனர்.

முழுமையாக என்ன நடந்தது என்பது போலீசாரின் விசாரணைக்கு பின்னே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Video: Stomp 

கார் நிறுத்துமிடம், வாகனங்கள், உடற்பயிற்சி நிலையங்களில் நாசவேலை – 4 பேர் கைது