19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் இன்று தொடக்கம்!

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் இன்று தொடக்கம்!
Photo: Team Singapore

 

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று (செப்.23) சீனாவில் தொடங்குகிறது. ஹாங்சோ நகரில் (Hangzhou) உள்ள ஒலிம்பிக் விளையாட்டு மைதானத்தில் சிங்கப்பூர் நேரப்படி மாலை 04.00 மணிக்கு நடக்கும் விழாவில், போட்டிகளை சீன அதிபர் ஷி ஜின்பிங் தொடங்கி வைக்க உள்ளார்.

சிக்கன் ரைஸ், கோழி கறி, முட்டை வெறும் S$0.20 மட்டும் – இரு தினங்களுக்கு மட்டுமே ஆஃபர்

தொடக்க விழாவில், சீனாவின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தொடக்க விழா அணி வகுப்பில் பல்வேறு நாடுகளின் வீரர், வீராங்கனைகள் தங்கள் நாட்டின் கொடியை ஏந்தி வலம் வரவுள்ளனர்.

ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த இந்தியா, சீனா, ஜப்பான், மலேசியா சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ், கம்போடியா, தைவான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட 45 நாடுகளைச் சேர்ந்த 12,500 வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொள்கின்றனர்.

விமானத்தில் நாயுடன் அமர்ந்து பயணித்த தம்பதி: கட்டண வித்தியாச தொகை திருப்பி அளிப்பு

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று (செப்.23) தொடங்கி, அக்டோபர் மாதம் 8- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நீச்சல், துப்பாக்கிச் சுடுதல், வாள்வீச்சு, படகுபோட்டி, டேபிள் டென்னிஸ், தடகளம் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களைக் குவிக்க சிங்கப்பூர் வீரர், வீராங்கனைகள் ஆவலுடன் உள்ளனர்.