விமானத்தில் நாயுடன் அமர்ந்து பயணித்த தம்பதி: கட்டண வித்தியாச தொகை திருப்பி அளிப்பு

Spore Airlines bring back hot towels
Photo: Mothership

விமானத்தில் நாயுடன் அமர்ந்து பயணித்த தம்பதிக்கு கட்டண வித்தியாச தொகை திருப்பி அளிக்கப்பட்டதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) தெரிவித்துள்ளது.

கில் மற்றும் வாரன் பிரஸ் ஆகியோர் பாரிஸிலிருந்து சிங்கப்பூருக்கு SIA விமானத்தில் பயணம் செய்து செய்தனர்.

லாரி மீது மரம் விழுந்து கடும் விபத்து விபத்து.. பயணம் செய்த 3 பேர் நிலை என்ன என்று தெரியவில்லை

பிரீமியம் எகானமி இருக்கையில் சென்ற அவர்களுடன் நாய் ஒன்று அமர்ந்து இருந்ததையும் கண்டறிந்தனர்.

நாயிடம் இருந்து முரட்டு குறட்டை சத்தம் கேட்டதாகவும் கீழே பார்த்தபோது, ​​அது நாய் என்பதையும் அவர்கள் உணர்ந்தனர்.

தன் கணவரின் காலில் அந்த நாய் எச்சில் வடித்து அசுத்தம் செய்ததாகவும் திருமதி. பிரஸ் கூறினார்.

பின்னர் இது குறித்து அவர்கள் மின்னஞ்சல் மூலம் விமான நிறுவனத்திடம் புகார் அளித்தனர்.

அதன் பின்னர், விமான நிறுவனம் தலா S$100 மற்றும் S$160 என பயண வவுச்சரை (US$73) வழங்க முன்வந்ததாகவும், ஆனால் அவர்கள் அதனை அனைத்தையும் நிராகரித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதியாக அவர்களுக்கு அந்த பயண வித்தியாச தொகை வழங்கப்பட்டுள்ளது.

இந்த உதவி துணை நாய்கள் விமானங்களில் அனுமதிப்படுவதாக SIA கூறியுள்ளது.

சிங்கப்பூர் தீமிதி திருவிழா: பக்தர்கள் பதிவு செய்வது கட்டாயம் – முழு விவரம் வெளியீடு