சிங்கப்பூர் தீமிதி திருவிழா: பக்தர்கள் பதிவு செய்வது கட்டாயம் – முழு விவரம் வெளியீடு

Firewalking Festival 2023 Participation

சிங்கப்பூர் தீமிதி திருவிழா: சிங்கப்பூரில் உள்ள மிகப் பழமையான மற்றும் பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று ஸ்ரீ மாரியம்மன் கோயில் (Sri Mariamman Temple).

இந்த கோயில், சவுத் பிரிட்ஜ் சாலையில் (South Bridge Road) அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தீமிதித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது நாம் அறிந்தது தான்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் லாரி விபத்துக்கள் யாரால் ஏற்படுகிறது?

அந்த வகையில், வரும் நவம்பர் மாதம் 5- ஆம் தேதி ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் (HEB) அறிவித்துள்ளது.

இந்நிலையில், நேர்த்திக்கடன் செலுத்த விரும்பும் பக்தர்கள் கட்டாயம் இணையம் வழி பதிவு செய்துகொள்ள வேண்டும்.

வரும் செப். 25 முதல் நவ. 4 வரை அதற்காக வேண்டி பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

யாருக்கு கட்டாயம்?

அங்கப் பிரதட்சணம், பால்குடம் எடுத்தால், தீமிதி சடங்கு, பூக்குழி வலம் ஆகியவற்றிற்கு இணையம் வழி பதிவு கட்டாயம்.

கோவிலில் சென்று நேரடியாக பதிவு செய்ய முடியாது, இணைய வழியில் பதிவு செய்து கட்டணம் செலுத்தினால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

நேர விவரங்களை சரியாக பதிவிடும் படியும், பதிவு செய்துவிட்டு பின்னர் நேரத்தை மாற்றலாம் என்றால் அது முடியாது என்பதையும் HEB கூறியுள்ளது.

இணையம் வழி பதிவு செய்ய: https://heb.org.sg/fw2023

இலவச பரோட்டா வழங்கும் உணவகம் – அதன் 10 கடைகளிலும் உண்டு மகிழலலாம்!