வெளிநாட்டு ஊழியர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் லாரி விபத்துக்கள் யாரால் ஏற்படுகிறது?

foreign workers lorry accidents
(Photo: 8world reader)

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றி செல்லும் லாரி விபத்துக்கள் அதிகமானவை மற்ற வாகன ஓட்டுநர்களால் ஏற்பட்டதாக உள்துறை அமைச்சர் கா.சண்முகம் கூறியுள்ளார்.

இது குறித்து நாடாளுமன்றத்தில் எழுந்த கேள்விக்கு அவர் எழுத்துபூர்வமாக தனது பதிலை கூறினார்.

டெலி ஹப் கேட்டரிங் உணவை சாப்பிட்ட 21 பேர் பாதிப்பு – நிறுவனத்துக்கு S$4,000 அபராதம்

ஊழியர்களை ஏற்றி செல்லும் லாரி விபத்துகளில் பாதிக்கு மேற்பட்டவை அவ்வாறாக நடந்ததாக அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் கடந்த 5 ஆண்டு நிலவரப்பபடி, அதுபோன்ற லாரி விபத்தில் சிக்கிய ஊழியர்கள் காயமடைந்தனர் அல்லது உயிரிழந்தனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

56 சதவீத விபத்துக்கள் மற்ற வாகன ஓட்டுநர்களின் தவறால் நிகழ்ந்ததாக புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.

45 சதவீத விபத்துக்கள் லாரியை இயக்கிய ஓட்டுநர்களின் தவறால் நிகழ்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இரு பக்க தவறுதலாலும் சில விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.

சில விபத்துகளுக்கு யார் காரணம் என்றே தெரியவில்லை என்பதையும் அவர் எழுத்துபூர்வமாக சுட்டிக்காட்டினார்.

இலவச பரோட்டா வழங்கும் உணவகம் – அதன் 10 கடைகளிலும் உண்டு மகிழலலாம்!