டெலி ஹப் கேட்டரிங் உணவை சாப்பிட்ட 21 பேர் பாதிப்பு – நிறுவனத்துக்கு S$4,000 அபராதம்

நியோ குழுமத்தின் ஒரு பகுதியாக இயங்கும் டெலி ஹப் கேட்டரிங் தனது குறைபாடுகளை சரிசெய்துகொள்ள வேண்டும் என SFA உத்தரவிட்டது. Deli Hub Catering fined over hygiene lapses
SFA

டெலி ஹப் கேட்டரிங் (Deli Hub Catering) நிறுவனம் தயாரித்த உணவை உட்கொண்ட 21 பேர் நோய்வாய்ப்பட்டதை அடுத்து அந்நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில், அந்நிறுவனத்தில் சுகாதாரக் குறைபாடுகள் இருந்த காரணத்திற்காக நேற்று (செப். 20) S$4,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இலவச பரோட்டா வழங்கும் உணவகம் – அதன் 10 கடைகளிலும் உண்டு மகிழலலாம்!

உணவை உட்கொண்ட 21 பேருக்கும் இரைப்பை குடல் அழற்ச்சி ஏற்பட்டதாகவும், அதன் பிறகு சுகாதார அமைச்சகம் (MOH) மற்றும் சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) ஆகியவை கூட்டு விசாரணையை நடத்தியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

அசுத்தமான உறைவிப்பான், கொள்கலன்கள் உட்பட சுகாதார குறைபாடுகள் அங்கு கண்டறியப்பட்டதாக SFA தெரிவித்துள்ளது.

நியோ குழுமத்தின் ஒரு பகுதியாக இயங்கும் டெலி ஹப் கேட்டரிங் தனது குறைபாடுகளை சரிசெய்துகொள்ள வேண்டும் என SFA உத்தரவிட்டது.

சம்பவத்தில் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.

பைக் மோதிய விபத்தில் இந்திய ஊழியர், ஓட்டுநர் மரணம்: ஊழியரின் குடும்பத்துக்கு உதவி வருவதாக LTA தகவல்