போதைப்பொருள் கடத்தல்; சிங்கப்பூரில் 2 மலேசிய பெண்கள் கைது..!

2 Malaysian women arrested
2 women arrested after S$30,000 worth of cannabis found in car (Photo: Central Narcotics Bureau)

துவாஸ் சோதனைச் சாவடியில் கடந்த புதன்கிழமை 3 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவை காரில் மறைத்து வைத்து கொண்டுசென்ற இரண்டு மலேசிய பெண்கள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அதிகாலை 4.40 மணியளவில் நடந்ததாக குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) மற்றும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பணியகம் (CNB) செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் S Pass என்னும் வேலை அனுமதி குறைக்கப்படும் – அரசு..!

மலேசிய பதிவு கொண்ட காரில் ICA அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டனர், ​​அப்போது வாகனத்தின் பின்புற இருக்கையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கிலோவிற்கு அதிகமான கஞ்சாவை கண்டுபிடித்தனர்.

இதில் 22 மற்றும் 23 வயதுடைய இரண்டு மலேசிய பெண்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

மேலும் இந்த வழக்கு CNB அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது என்று ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதையும் படிங்க : சட்டவிரோதமாக வெளிநாட்டு தொழிலாளர்களை சிங்கப்பூருக்குள் அழைத்து வந்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு..!

CNB அதிகாரிகள் நடத்திய கூடுதல் சோதனையில், காரில் மேலும் 1 கிலோ கஞ்சாவைக் கண்டுபிடித்தனர்.

பிடிபட்ட கஞ்சாவின் மொத்த மதிப்பு S$30,000 என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Source : CNA