சிங்கப்பூரில் S Pass என்னும் வேலை அனுமதி குறைக்கப்படும் – அரசு..!

foreign worker fine

சிங்கப்பூர் தொடர்ந்து வெளிநாட்டு தொழிலாளர்களை சார்ந்திருப்பதைக் குறைக்கும் என்று துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான ஹெங் சுவீ கியெட் தனது 2020 பட்ஜெட் உரையில் பிப்ரவரி 18 அன்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில், சிங்கப்பூரில் எஸ் பாஸ் (S Pass) எனப்படும் சிறப்பு அனுமதி அட்டைகளின் எண்ணிக்கை குறைக்கப்படவுள்ளது.

இதையும் படிங்க : COVID-19 கொரோனா வைரஸ் தொற்று; விமான சேவையை குறைக்க முடிவு..!

குறிப்பாக, கட்டுமானம், கடல் கப்பல் தளம் மற்றும் செயல்முறை துறைகளின் எஸ் பாஸ் துணை சார்பு விகித உச்சவரம்பை (DRC) 20 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைக்க உள்ளது.

இது இரண்டு கட்டங்களாக குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது:

  • வரும் ஜனவரி 1, 2021 முதல், எஸ் பாஸ் துணை-DRCகள் (sub-DRCs) 20 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்படும்.
  • இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது ஜனவரி 1, 2023 அன்று, எஸ் பாஸ் துணை-DRCகள் (sub-DRCs) 15 சதவீதமாகக் குறைக்கப்படும்.

“நிறுவனங்கள் புதிய மாற்றங்களுக்கு ஏற்ப நடந்துகொள்ள ஏற்றவாறு, ஒரு வருடம் முன்னதாக மாற்றங்களை நாங்கள் அறிவிக்கிறோம்,” என்று ஹெங் கூறினார்.

சேவைத்துறைகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கப்போவதாக அரசாங்கம் சென்ற ஆண்டு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கைகள் வெளிநாட்டு ஊழியர்கள் வேலைக்கு எடுக்கப்படுவதைச் சீர்ப்படுத்துவதோடு சிங்கப்பூரர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் என நிதியமைச்சர் ஹெங் சுவீ கியெட் கூறினார்.

இதையும் படிங்க : COVID-19 வைரஸ் தொற்று: உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் அறிவுரைகள்..!