சிங்கப்பூரில் 20,000 குழந்தைகள் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டனர் – கல்வி அமைச்சர்

(photo: mothership)

சிங்கப்பூரில் கடந்த டிசம்பர் 27 அன்று முதல் குழந்தைகளுக்கான தடுப்பூசி ஏற்பாடு தொடங்கியது.

அதில் இருந்து, சுமார் 20,000 குழந்தைகள் முதல் டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் போட்டுகொண்டுள்ளனர் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறினார்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் மரணம்: இந்திய ஊழியர் மீது கொலை குற்றச்சாட்டு – முழு தகவல்

கல்வி அமைச்சகத்தின் (MOE) பள்ளிகளின்கீழ் வராத, ஒன்பது முதல் 11 வயது வரையில் உள்ள குழந்தைகளுக்காக சுமார் 8,600 புதிய தடுப்பூசி முன்பதிவுகள் வந்துள்ளதாகவும் திரு சான் கூறினார்.

இந்த தடுப்பூசி விகிதம் அதிகரிப்பு என்பது பெற்றோரின் ஆதரவினாலும், பொது மற்றும் சுகாதார அதிகாரிகளின் கடின உழைப்பினாலும் மட்டுமே சாத்தியம் என்று திரு சான் இன்று (ஜனவரி 2) பேஸ்புக் பதிவில் கூறினார்.

சென்னையில் பேயாட்டம் ஆடிய கனமழை: சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் பாதிப்பு