சிங்கப்பூரில் சுமார் 247,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு கிருமித்தொற்று இல்லை..!

247,000 workers have either recovered or tested to be free from the coronavirus
247,000 workers have either recovered or tested to be free from the coronavirus (Photo: NYTimes)

சிங்கப்பூரில் கடந்த திங்கள்கிழமை நிலவரப்படி, சுமார் 247,000 வெளிநாட்டு ஊழியர்கள் கிருமித்தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளனர் அல்லது அவர்களுக்குக் கிருமித்தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையானது கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சுமார் 215,000 ஆக இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தேங்காயில் பதுக்கிவைக்கப்பட்ட போதைப்பொருள் பறிமுதல் – 3 பேர் கைது..!

சிங்கப்பூரில் மொத்தம் 891 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் COVID-19 கிருமித்தொற்று முற்றிலும் இல்லாத பகுதிகளாக உறுதிசெய்யப்பட்டுள்ளன.

குணமடைந்த ஊழியர்களுக்காக கட்டப்பட்டுள்ள 17 விடுதிகளில் 56 ப்ளாக்குகள் COVID-19 அபாயம் நீங்கிய பகுதிகளாக உறுதிசெய்யப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் வசிக்கும் ஊழியர்கள் ஆவார்கள்.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து 4ஆம் கட்டமாக தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg