பாயா லெபார் MRT நிலையத்துக்குள் சண்டை – 3 பேரை மடக்கி பிடித்த போலீசார்

பாயா லெபார் MRT நிலையத்துக்குள் சண்டை - 3 பேரை மடக்கி பிடித்த போலீசார்
Complaint Singapore/Facebook

பாயா லெபார் MRT நிலையத்துக்குள் நடந்த சண்டையில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் சதுக்கத்திற்கு வெளியே உள்ள திறந்த வெளியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 10) நடந்ததாக சமூக ஊடகங்களில் பல காணொளிகள் பரவின.

லிப்ட்டில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர் – பயிற்சி பெறாத ஊழியரை பலியாக்கிய பொறியாளர்

சண்டையை தடுத்துவிட SMRT ஊழியர்கள் முயற்சி செய்வதையும் காணொளியில் காண முடிந்தது.

“ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 5.45 மணியளவில் 60 பாயா லெபார் சதுக்கத்தில் சண்டை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.”

“மேலும் 40 மற்றும் 45 வயதுடைய இரண்டு பெண்களும், 26 வயதுடைய ஆணும் கைது செய்யப்பட்டனர்” என்று போலீசார் கூறினர்.

பொது இடத்தில் அமைதியை சீர்குலைக்கும் விதமாக அவர்கள் சண்டையிட்டது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு விசா இல்லா இலவச அனுமதி – பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டம்

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு விசா இல்லா இலவச அனுமதி – பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டம்