ஊழியர் உட்பட 3 பேருக்கு Omicron கிருமி வகை அடையாளம்

Changi Airport

சிங்கப்பூரில் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு ஓமிக்ரான் வகை பாதிப்பு இருப்பதாக முதற்கட்ட சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சகம் (MOH) புதன்கிழமை (டிசம்பர் 15) தெரிவித்துள்ளது.

அதில் ஒருவர் உள்நாட்டு ஊழியர், ஒருவர் வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் வந்த நபர் மற்றும் மூன்றாவது நபர் வெளிநாட்டில் இருந்து வந்தவரின் உறவினர்.

விரைவு சோதனை நிலையங்களில் சுய ART சோதனைகளுக்கு கட்டணம் எவ்வளவு?

மூன்று நபர்களும் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், மேலும் அவர்களுக்கு லேசான அறிகுறி அல்லது அறிகுறிகள் ஏதும் இல்லை என்றும் MOH கூறியுள்ளது.

உள்நாட்டு பாதிப்பு

சாங்கி விமான நிலைய முனையம் 3இல் லோடிங் கேபின் உதவியாளராகப் பணிபுரியும் 54 வயது நபர் உள்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்

அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த 36 வயது ஆடவர் மற்றும் இவரின் மனைவிக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அவர்கள் தேசிய தொற்று நோய்களுக்கான நிலையத்தில் (NCID) தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் குணமடைந்து வருகின்றனர் என்று MOH செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் இருந்து இந்தியா வரும் பயணிகளில் 2 சதவீதம் பேர் PCR சோதனைக்காக தேர்ந்தெடுப்பு