சிங்கப்பூரில் 3 கதவுகளுடன் இரண்டு அடுக்கு பேருந்து சேவை- காணொளி!

3-door double deck buses
3-door double deck buses (PHOTO: LTA)

சிங்கப்பூரில், 3 கதவுகளுடன் இரண்டு அடுக்கு பேருந்துகளின் சேவை விரைவில் வர உள்ளதாக நிலப் போக்குவரவு ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது.

இந்த 2021ஆம் ஆண்டில் அவ்வைகையான 100 பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை-சிங்கப்பூர் இடையே செல்லும் பயணிகளுக்கு நற்செய்தி!

அதாவது, முதல் 50 பேருந்துகள் இந்த ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும், மீதமுள்ளவை இரண்டாம் காலாண்டில் அறிமுகப்படுத்தப்படும்.

அனைத்து பேருந்துகளிலும் இரண்டு இடங்களில் படிக்கட்டும், பேருந்தின் பின்புறத்தில் கூடுதலாக வெளியேற கதவு ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கூட்ட நெரிசலின்போது இந்த வகையான படிக்கட்டுகள் பெரிதும் உதவி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பேருந்துகளிலும் உள்ள வசதிகள்

  • பயணிகளுக்கு தகவல் அளிக்கும் காட்சி அமைப்பு
  • பார்வையற்றோருக்கான ஒலி வழியான அறிவிப்புகள்
  • சக்கர நாற்காலி வசதிகள்
  • நடுவில் உள்ள கம்பத்துடன் முன் கதவுகள் அகற்றப்பட்டிருக்கும், எனவே சக்கர நாற்காலி போன்ற குழந்தைகளுக்கான தள்ளும் வண்டிகளுடன் பெற்றோர்கள் எளிதாக ஏறலாம்.
(PHOTO: LTA/Facebook)

Sriwijaya விமான விபத்து: “மீட்புப்பணிகளுக்கு உதவ சிங்கப்பூர் தயார்” – பிரதமர் லீ

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…