கிளெமெண்டி வனப்பகுதியில் வழிமாறி தொலைந்த 3 பெண்கள் – பத்திரமாக மீட்ட காவல்துறை

Photo: Jimmy Ng/Google Maps

கிளெமெண்டி வனப்பகுதியில் நேற்று (ஆக. 3) மாலை வழி தவறிய 35 மற்றும் 47 வயதுக்குட்பட்ட மூன்று பெண்களை காவல்துறையினர் பாதுகாப்பாக அழைத்து வந்தனர்.

இரவு 7:37 மணியளவில் உதவி வேண்டி காவல்துறைக்கு அழைப்பு வந்தது, பின்னர் கிளெமெண்டி வனப்பகுதியில் மூன்று பெண்கள் தவறியதை காவல்துறை உறுதி செய்தது.

தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆறு நாட்களுக்குப் பிறகு இருதய பாதிப்பு – பொது வார்டுக்கு இளையர் மாற்றம்!

கிளெமென்டி சாலையில் இரவு 8:30 மணியளவில் நீண்ட வரிசையில் காவல்துறை வாகனங்கள் காணப்பட்டன.

இது தொடர்பான காணொளி ஒன்று Singapore Hikers பேஸ்புக் குழுவில் பயனர் ஒருவரால் பகிரப்பட்டது.

இறுதியில் அந்த மூன்று பெண்களும் இரவு 8:55 மணியளவில் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர்.

அதிர்ஷ்டவசமாக, பெண்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

லாரிகளில் போதிய வசதி இல்லாமல் ஊழியர்களை ஏற்றிச் சென்ற 23 குற்றவாளிகள் பிடிபட்டனர்