சிங்கப்பூரில் மேலும் மூன்று உணவு மற்றும் பான கடைகளை மூட உத்தரவு..!

3 more F&B outlets ordered to close
3 more F&B outlets ordered to close (Photo: URA)

சிங்கப்பூரில் COVID-19 தொற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக, மேலும் மூன்று உணவு மற்றும் பான கடைகளை சமீபத்தில் மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MSE) தெரிவித்துள்ளது.

COVID-19 பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகளை மீறியதற்காக மேலும் நான்கு விற்பனை நிலையங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, இதனை ஊடக வெளியீட்டில் MSE கூறியுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் அதிகாரிகளின் சோதனையின்போது தப்பிக்க முயன்ற நபர் கீழே விழுந்து மரணம்..!

கடந்த செப்டம்பர் 17ம் தேதி அமைச்சகம் அறிவித்த 18 விற்பனை நிலையங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட அமலாக்க நடவடிக்கையை தொடர்ந்து, அதில் மூன்று கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரு கடையில் , தேனீர் கோப்பைகளில் பீர் பரிமாற்றப்படுவது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் தடை விதிக்கப்பட்ட, 39 ஹாங்காங் ஸ்டீரீட்டில் உள்ள ஒரு உணவகம், கடந்த செப்டம்பர் 12 அன்று ஒரு தனியார் இரவு நிகழ்ச்சிக்கு 15 பேர் கொண்ட குழுவுடன் ஏற்பாடு செய்துள்ளது.

இதில் மூட உத்தரவிடப்பட்ட கடைகளில், செரங்கூனில் உள்ள ஒரு காபி கடையில் அமைந்துள்ள ஒரு பானக் கடையும் அடங்கும்.

(Photo: SFA)

மேலும் மது விற்பனை மற்றும் அருந்துவதற்காக விதிக்கப்பட்டுள்ள நேரத்தைத் தாண்டி, கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி இரவு 10.55 மணிக்கு பல வாடிக்கையாளர்கள் மது அருந்துவதும் இதில் கண்டறியப்பட்டது.

அவர்கள், பிளாக் 261 செரங்கூன் சென்ட்ரல் டிரைவில் வெளிப்புற பகுதியில் இரண்டு மேஜைகளில் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் வழியாக இந்தியா வந்த விமானத்தில் பயணிகள் பல மணி நேரம் பரிதவிப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…