COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்த மேலும் சில பொது இடங்கள்..!

Mustafa Centre important announcement
(Photo from Google Maps)

COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியலில் மேலும் புதிதாக 3 இடங்களைச் சுகாதார அமைச்சகம் (MOH) சேர்த்துள்ளது.

புதிய இடங்களில் ஒரு உணவகம், பல்பொருள் அங்காடி மற்றும் சிங்டெல் ஸ்டோர் ஆகியவை அடங்கும்.

இதையும் படிங்க : துவாஸ் அருகே தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் போது சடலம் ஒன்று மீட்பு..!

கடந்த ஜூன் 24 முதல் ஜூலை 5 வரை, COVID-19 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் அந்த இடங்களுக்கு சென்றுவந்துள்ளனர்.

புதிய இடங்களும் அவற்றின் முகவரிகளும் பின்வருமாறு:

  • முஸ்தபா சென்டர் (145 Syed Alwi Road)
  • JEM (50 Jurong Gateway Road)
    • Penang Culture
    • Don Don Donki
  • ஜூரோங் பாயிண்ட் (1 Jurong West Central 2)
    • Singtel

குறிப்பிட்ட அந்த இடங்களில் இருந்தவர்கள், அங்கு சென்றுவந்த நாளிலிருந்து 14 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் MOH கூறியுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் ஏழு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் COVID-19 கிருமித்தொற்று முற்றிலும் இல்லை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg